வரதட்சணை கேட்டு மனைவிக்குகொலை மிரட்டல். கணவர் -மாமியார் உட்பட 5 பேர் மீது வழக்கு.

கோவை செல்வபுரம், முத்துசாமி காலனி, நேரு நகரை சேர்ந்தவர் செல்வகுமார். நகைத் தொழிலாளி.இவரது மனைவி விஷ்ணு அபிராமி ( வயது31) இவர்களுக்கு 13- 12 -2018 அன்றுதிருமணம் நடந்தது.ஒரு மகனும், ஒரு மகனும் உள்ளனர். கணவர் செல்வகுமார் குடிப்பழக்கம் உடையவர்.இதனால் அவர் ஒழுங்காக வேலைக்கு செல்வதில்லை. மேலும் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியை தாக்கி வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தினாராம்.அவர் அணிந்திருந்த 10 பவுன் தங்க நகைகள் , வெள்ளி கொலுசு ஆகியவற்றை பிடுங்கி வைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு அவரது குடும்பத்தினர் உடந்தையாக இருந்தார்களாம். இதுகுறித்து விஷ்ணு அபிராமி செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கோமதி, சப் இன்ஸ்பெக்டர் தீபா ஆகியோர் விசாரணை நடத்தி விஷ்ணு அபிராமியின் கணவர் செல்வகுமார், மாமனார் லட்சுமணன், மாமியார் சாந்தி, நாத்தனார் ராஜாத்தி, அவரது கணவர் சதீஷ்குமார் ஆகியோர் மீது வரதட்சனை கொடுமை, கொலை மிரட்டல் உட்பட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.