குடும்பம் நடத்த வரமறுத்த மனைவியை தாக்கி கொலை மிரட்டல். கணவர் கைது.

கோவை: மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோட்டில் உள்ள எம்.ஆர்.டி. நகரை சேர்ந்தவர் வேலுசாமி என்ற நவாஸ் செரீப் (வயது 35) கூலி தொழிலாளி. இவரது மனைவி சகிலா பேகம் (வயது 33 )இவர்கள் இருவரும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர் .ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர் .நவாஸ்செரீப் குடிப்பழக்கம் உடையவர் இதனால் இவர்களுக்கு இடையேஅடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் மனைவி சகிலா பேகம் கோபித்துக் கொண்டு சிறுமுகை எஸ்.ஆர்எஸ் நகரில் உள்ள அவரதுபெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார் .நேற்று குடிபோதையில் அங்கு வந்த நவாஸ் செரீப் ,மனையை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார் அதற்கு அவர் மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்தநவாஸ்செரீப் வீடு புகுந்து மனைவியைதாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து சகிலா பேகம் சிறுமுகை போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் வழக்கு பதிவு செய்து கணவர் வேலுசாமி என்ற நவாஸ் செரீப்பைகைது செய்தார் .இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் தாக்குதல் உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.