வன உயிரினங்களை வேட்டையாடியவர்கள் கைது.!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வனச்சரக வனதுறையினருக்கு கமுதி டீ. கல்லுப்பட்டி, புதுகுடியிருப்பு பகுதியில் தொடர்ந்து வன உயிரின வேட்டை நடப்பதா கவும் வன உயிரனங்களின் இறைச்சி விற்பனை செய்வதாகவும் ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து. சாயல்குடி வனச்சரக அலுவலர் தலைமையில் விருதுநகர் வனபாதுகாப்புபடை உடன் தனிப்படை அமைக்கப்பட்டு வன உயிரினங் களை வேட்டையாடி விற்பனை செய்யும் கும்பலை தேடும் பணி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து டீ. கல்லுப்பட்டி புதுகுடியிருப்பு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட ஆட்காட்டி பறவையை சுட்டு வாட்டிகொண்டிருந்த அர்ஜூன் (39 ) என்பவரை கையும் களவுமாக பிடித்து விசாரித்த பொழுது முத்துக்குமார் (29) என்பவருடன் இணைந்து வேட்டையாடி விற்பனை செய்வதற்காக வைத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். முத்துக்குமார் வீட்டில் சோதனையிட சென்றபோது வனத்துறையினரை கண்டதும் தப்பியோட முயன்றவரை வனத்துறையினரை விரட்டி பிடித்து விசாரித்தனர். அப்போது அவரது வீட்டின் அருகில் கிடந்த கோணிப்பையில் இரண்டு கோணி பைகளில் நான்கு முயல்கள் உயிருடன் இருந்தன. மேலும் ஒரு பச்சை நிற கூண்டில் இருதலை மணியன் பாம்பு ஒன்று உயிருடன் அடைக்கப்பட்டிருந்தது. மேலும் ஒரு பச்சை நிற உரசாக்கில் பனங்காடை, பெரிய கொக்கு, ஜொலிக்கும் அறிவாள் முக்கன் உட்பட பல பறவைகளின் இறகுகள் மற்றும் குடல்கள் இருந்தது அது குறித்து அவரிடம் விசாரித்த போது அவற்றை வெட்டி விற்பனை செய்து விட்டதாகவும் முயல்கள் மற்றும் இருதலை மணியன் பாம்பை விற்பனை செய்வதற்காக வைத்துள்ள தாகவும் தெரிவித்தனர். அவர்களை வனத்துறை யினர் கைது செய்து கமுதி குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத் தனர். பின்பு உயிருடன் மீட்கப்பட்ட மண்ணுளி பாம்பு ஒன்றும் காட்டு முயல்கள் நான்கும் நல்ல முறையில் செல்வனுர் அரசு காப்புகாட்டு பகுதியில் விடுவிக்கபட்டது. மேலும் வனத்துறையினர் தெரிவிக்கையில் மண்ணுளி பாம்பு விவசாயிகளுக்கு நண்பனாகவும் இயற்கை உரத்திற்கும் மண் வளத்திற்கும் பயனுள்ளது. என்றும் வன உயிரன பாதுகாப்பு சட்டம் 1972 amd 2023 இன்படி பட்டியல் 1 படி பாதுகாக்கபடும் உயிரனமாகும். இதனை பிடிப்பவர்களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் 25000 அபராதம் விதிக்கப்பட வாய்புள்ளது. எனவே காட்டு முயல்கள் மற்றும் அனைத்து பறவைகளும் பட்டியல் 2 இல் பாதுகாக்கபடும் உயிரனமாகும். இவற்றை வேட்டை யாடுவது சட்டப்படி குற்றம் என்றும் வன உயிரனங் களை வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித் தனர். வனவிலங்குகளை வேட்டை யாடுபவர்கள் பற்றிய பொதுமக்கள் வனத்துறை யினருக்கு ரகசியமாக தகவல் கொடுக்கலாம் என்றும் ரகசியம் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.