செங்குன்றத்தில் திருவிளக்கு பூஜை..!

மாதவரம் தொகுதி செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சி அருகே 9 அடி உயர ஸ்ரீ சக்தி விநாயகரை பிரதிஷ்டையுடன் 33-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை  நடைபெற்றது.ஸ்ரீ சக்தி விநாயகர் சதுர்த்தி விழாக்குழு நிர்வாகிகள் தலைவர் நாகராஜன்,  கௌரவ ஆலோசகர்கள் கணேசன், சுந்தரம், செயலாளர் ஹரிஷ், பொருலாளர் மணிகண்டன், துணைத்தலைவர் நரேஷ், துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் விழாக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் கண்ணன், ராஜா, சரவணன், சதீஷ்குமார், வெங்கடேசன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.நிகழ்ச்சியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள்  திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு  சிறப்பு வழிபாடு செய்து தங்களின் நேர்த்தி கடனை பூர்த்தி செய்தனர். பின்னர் திருவிளக்கு பூஜையில் பங்கு பெற்றவர்களுக்கு  குலுக்கல் முறையில் ஒரு தாய்மார்க்கு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி விநாயகர் சிலையை பரிசாக விழாக் குழுவினர்கள் சார்பில் வழங்கினர்.  இதில் விழாக்குழு பொறுப்பாளர்கள், சுற்றுவட்டார பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கினர்.