திருவேற்காடு நகராட்சி முடங்கியது 7 மாத காலமாக இன்ஜினியர் எங்கே

திருவள்ளூர் மாவட்டம் அழகிய நகராட்சி திருவேற்காடு நகராட்சி சென்னை மாநகரில் பல கோடி ரூபாய் வீட்டுமனைகளை வாங்க முடியாதவர்கள் நாடி வருவது திருவேற்காடு நகராட்சியை தான் ஆண்டிற்கு பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டி தரும் திருவேற்காடு நகராட்சிக்கு புதிய புதிய நகர்கள் உருவாகி வருகின்றன கடந்த மாதம் நாம் பார்த்த திருவேற்காடு நகரம் வேறு மாதிரியாக தெரிகிறதே ரியல் எஸ்டேட் பில்டர்களை நாடிவரும் நடுத்தர மக்கள் மாநகர பேருந்துகளில் ஆடு மாடு மந்தை போல் குவியல் குவியலாக பொதுமக்கள் நாடி வருவது இந்த நகரின் தனி சிறப்பு நகராட்சி நிர்வாகமும் தினுசு தினுசான திட்டங்களை தீட்டி இந்த நகருக்கு அமல்படுத்தி வருகின்றனர் இந்த நகரில் திட்டங்களை பொதுமக்களுக்கு அமல்படுத்தி குஷி படுத்திட வேண்டும் ஆனால் என்ன நடக்கிறது நகராட்சிக்கு ஆணையாளர் என்று கணேஷ் என்பவர் ஒருவர் இருக்கின்றார் கடந்த ஏழு மாத காலமாக இன்ஜினியர் என்கிற நபரே இல்லாமல் நகராட்சி நிர்வாகம் தடுமாறிக் கொண்டுதான் இருக்கின்றது இன்ஜினியர் என்ற நிலையை போக்கிட தாம்பரத்தில் செயல்பட்டு வரும் மண்டல நகராட்சி இயக்குனர் அலுவலகத்தில் மண்டல பொறியாளராக செயல்பட்டு வந்த பார்த்திபன் என்பவரை கூடுதல் பொறுப்பாக நியமித்தனர் அவர் என்ன செய்வார் பாவம் கூடுதல் பொறுப்பும் வேண்டாம் நிரந்தர பொறுப்பும் வேண்டாம் என ஓடியே விட்டார் என்னதான் செய்வது குவியல் குவியலாக பொதுமக்கள் எங்கள் நகரில் திட்டப் பணிகள் முடங்கி போய் உள்ளன நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் நிரந்தரமாக நகராட்சி இன்ஜினியர் வேண்டுமென குக்குரல் எழுப்பி வருகின்றனர் நகராட்சி தரப்பில் இது பற்றி கேட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும் அமைச்சர் கே என் நேருவிடம் போய் கேளுங்களேன் நகராட்சி நிர்வாக துறை செயலர் கார்த்திகேயன் ஐஏஎஸ் இயக்குனர் நகராட்சிகளின் நிர்வாகம் சிவராசு விடம் போய் கேளுங்களேன் பதில் திருப்தியாக இல்லை என்றால் நிர்வாகமே ஸ்தம்பிக்கும் அளவிற்கு சாலை மறியல் செய்யுங்களேன் என அதிகாரிகளே கூறுகின்றனர் கூட்டமாக வந்த பெண்கள் எங்களை சாலை மறியல் செய்ய சொல்கிறீர்கள் சாலை மறியல் செய்தார் போலீஸ்காரன் வந்து லட்டியால் எங்கள் முதுகை பதம் பார்க்க வேண்டுமா கூட்டத்தில் இருந்த ஒரு பெண் ஐயா சாமி நானும் திருச்சி கார பெண் தான் கேஎன் நேரும் ஒரே ஜாதி தான் இன்னும் சொல்லப்போனால் தூரத்து உறவு தான் எம்பி எலக்சன் தேர்தல் வரப்போகிறது இமாம் பெரிய நகராட்சிக்கு ஒரு கவர்மெண்ட் ஆபிசர் போட வக்கில்லாத உயர் அதிகாரிகள் தேவையா தேர்தல் நேரத்தில் எங்க வேலையை காட்ட போறோம் என கூவி னர் இப்போது லேட்டஸ்ட் டாக் என்னவென்றால் திட்டங்களை நிறைவேற்றக் கூடிய ஒரு அதிகாரியும் சரியில்லை இப்படி இருந்தால் பொதுமக்களை எப்படி திருப்தி படுத்த முடியும் கோவில் நகரமான திருவேற்காடு நகரம் கருமாரி அம்மன் அனைத்தையும் பார்த்துக் கொள்வாள் என்ன செய்வது நம் தலையெழுத்து அனுபவித்து ஆக வேண்டும் தாலியை விற்று நகையை விற்று பத்து ரூபாய் வட்டிக்கு பணத்தை வாங்கி வீடு கட்டினால் இந்த ஊரில் எப்படி நிம்மதியாக வாழ முடியும் எம் எல் ஏ பிளஸ் திமுக மாவட்ட செயலாளராக இருப்பவர் அண்ணன் நாசர் என்ன செய்கிறார் பதில் சொல்லப் போகிறாரா