திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு ஊராட்சி ஒன்றியம் ஒ திக்காடு ஊராட்சி காந்தி ஜெயந்தியை யொ ட்டி கிராம சபை கூட்டம் எம்ஜிஆர் நகரில் கோலாகலமாக நடந்தது. கூட்டத்திற்கு கிராம ஊராட்சி மன்ற தலைவி சமூக சேவகி ரோஜா தாமஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அதிரடி நாயகன் தாமஸ் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் தலைவர் ரோஜா தாமஸ் பேசும்போது இந்த நன்னாளில் எம்ஜிஆர் நகரில் சிதில மடைந்த தார் சாலைகள் சீரமைத்து மக்கள் போற்றும் படியாக போட்டு தரப்படும். மேலும் எம்ஜிஆர் நகரில் மயான வசதி இல்லாமல் இருக்கிறது. அதை உடனடியாக போட்டு தரப்படும். ஒன்றிய கவுன்சிலர் விமலா குமார் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிலம்பரசி ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பாலாஜி தங்கமணி வனிதா மேரி வெற்றிச்செல்வன் ஆகியோர் பேசினர் கூட்டத்தில் வரவு செலவு கணக்கு காண்பிக்கப்பட்டது. குடிநீர் பிரச்சினை இன்றி மக்கள் சந்தோஷமாக வாழ முடிவு எடுக்கப்பட்டுள்ளது.கூட்டத்தில் உள்ளாட்சித் துறையின் செயலர் காகன் தீப்சிங் பேடி திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் சிறப்பான முறையில் பாடுபடு வதால் அவருக்கு நன்றி தெரிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கூட்ட முடிவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆவடி எம்எல்ஏ அமைச்சர் நாசருக்கு தனி பாராட்டு தெரிவித்து கூட்டத்தில் சார்பில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0