திருப்பைஞ்சீலி கோவில் ஆடிப்பூர தேரோட்டம்.

திருச்சி மணச்சநல்லூர் திருப்பைஞ்சீலி நீலி வன நாதர் கோயிலில் ஆடிப்பூர விழா கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடர்ந்து விழா நாட்களில் சுவாமியும் அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது முன்னதாக அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்து அருளினார் தொடர்ந்து மதியம் 3.10 மணிக்கு மேல தாளங்கள் முழங்க திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் தேரோடும் வீதி வழியாக வளம் வந்து மாலை 5.20 மணிக்கு நிலையை அடைந்தது பக்தர்களுக்கு தேவையான குடிநீர் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை திருப்பை ஞ்சீலி ஊராட்சித் தலைவர் தியாகராஜன் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.