கோவை: பீகார் மாநிலத்தை சேர்ந்தவன் கோலு குமார் ( வயது 19)இவன் கோவை குனிமுத்தூரில் பெற்றோர்களுடன்தங்கியிருந்து உள் அலங்கார வேலைகள் செய்து வந்தான். இவன் கடந்த மாதம் 18ஆம் தேதி குனியமுத்தூரில் நடந்து சென்ற 71 வயது மூதாட்டியிடம் 3 பவுன் செயினை கொள்ளையடித்து விட்டு கேரளாவுக்கு தப்பி சென்று விட்டான். இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடி வந்தார்..அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்ததில் கொள்ளையன் கேரளாவுக்கு தப்பி சென்றது தெரியவந்தது. இதை யடுத்து கேரள போலீஸ் உதவி யுடன் காசர்கோட்டில் வைத்து குனியமுத்தூர் போலீசார் கோலு குமாரை நேற்றுகைது செய்தனர். இவன் கோவைக்கு அழைத்து வரப்பட்டான். திருடிய நகையை விற்றுஅதில் கிடைத்த பணத்தை ஆன்லைன் சூதாட்டம் ஆடியதாக விசாரணையில் தெரிய வந்தது. இவனிடம்மேலும் விசாரணை நடந்து வருகிறது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0