கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவியது. குறிப்பாக அவிநாசி சாலை,
திருச்சி சாலை உள்ளிட்ட பகுதிகளில் நிலவிய பனி மூட்டம் காரணமாக குளிர்ச்சியான இதமான சூழல் நிலவியது. இதே போல புறநகர் பகுதிகளிலும் கடும் பனிமூட்டம் நிலவியது. சோமனூர், கருமத்தம்பட்டி, கணியூர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவிய நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன. பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.இந்த பனிமூட்டம் காலை 8 மணிக்கு மேலாகவும் தொடர்ந்தது.இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் 8.34 க்கு தரையிறங்க வேண்டிய மும்பை விமானம் கடுமையான பனி மூட்டம் காரணமாக காலை 6.34 மணிக்கு மும்பையில் கிளம்பிய விமானம் 30 நிமிடம் தாமதமாக கோவை சர்வதேச விமானத்தில் தரை இறங்கியது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0