அரசு நிர்வாகத்தில் ஆளுநர் தமிழிசையின் தலையீடு இல்லை- புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேட்டி..!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது புதுச்சேரி மாநில மக்கள் மகிழ்ச்சியுடனும் சிறப்போடும் வாழ வேண்டும் என்பதற்காக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் அரசின் காலிப் பணியிடங்களை நிரப்பவும் பதவி உயர்வு வழங்கவும் அக்கரை எடுத்துள்ளோம் அதுபோல அனைத்து சமூக மக்களும் அனைத்து நலத்திட்டங்களும் குறித்த நேரத்தில் பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம் தீபாவளியை முன்னிட்டு உதவித்தொகை நேரடி பணப்பரிமாற்றம் மூலம் வழங்கப்பட்டுள்ளது தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு இலவச வேட்டி சேலை பணம் பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது தீபாவளி பண்டிகைக்கான 10 கிலோ இலவச அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை தொகையும் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது அதோடு நாலு மாத கால இலவச அரிசிக்கு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் வங்கியில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது இதற்காக ஒரு 43 கோடியே 85 லட்சம் நிதி அளிக்கப்பட்டுள்ளது கட்டிட தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு 3500 வழங்கப்பட்டிருக்கிறது அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஆயிரம் பணப் பரிமாற்றம் மூலம் வழங்கப்படும் புதுச்சேரிக்கு தேவையான பாலை அண்டை மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்கிறோம் கர்நாடகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டதால் நமக்கு பால் கிடைக்கவில்லை ஆனால் தற்போது கட்டுப்பாடு நீங்கி உள்ளது புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்காக கூடுதலாக 2000 கோடி நிதி வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டிருந்தோம் அவர்கள் பட்ஜெட் மறுமதிப்பீட்டில் இந்தத் தொகையை தருவதாக சொல்லி இருந்தார்கள் அதற்கான கூட்டம் டெல்லியில் நடந்தது அதில் தலைமை செயலரும் நிதி செயலரும் பங்கேற்றார்கள் அப்போது மத்திய அரசு 1400 கோடி கூடுதலாக வழங்க அனுமதி அளித்துள்ளது ஜிஎஸ்டி இழப்பீடு பென்ஷன் அரியர்ஸ் மற்றும் உள்கட்டமைப்பு மேம்படுத்த தேவையான நிதி ஆகியன கிடைக்கும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம் சாலைகளை சீரமைத்து வாய்க்கால்களை தூர்வாரி வருகிறோம். அதனால் இந்த ஆண்டு மழை நீர் பெரிய அளவில் தேங்காது ஆளுநர் சபாநாயகர் அனைவரும் ஒன்றுபட்டு தான் புதுச்சேரியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடியும் அரசு நிர்வாகத்தில் ஆளுநர் தமிழிசையின் தலையீடு இல்லை இவ்வாறு முதல்வர் ரங்கசாமி கூறினார்..