சென்னை: 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான தேர்வை முன்கூட்டியே நடத்தும் திட்டமில்லை என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அளவுக்கு சூழல் ஏற்படவில்லை. இருப்பினும் காய்ச்சல் தொடர்பாக மருத்துவத்துறை ஆலோசனையின்படி செயல்படுவோம்.பிளஸ் 1 பொதுத்தேர்வில் மாணவர்கள் பங்கேற்காதது குறித்து ஆலோசிக்க உள்ளோம். பொதுத்தேர்வுக்கு பயந்து வராமல் இருக்கிறார்களா அல்லது வேறு என்ன காரணம் என்பது குறித்து ஆலோசிக்க உள்ளோம்.தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளி இடை நிற்றல் அதிகமாக உள்ளது. 2019 ஆண்டில் பொதுத்தேர்வில் மாணவர்கள் வருகை குறைவாக இருந்தது. மாணவர்களின் மனநிலையை ஆய்வு செய்ய வேண்டும்.1 முதல் 9ம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு நடத்தும் திட்டமில்லை.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி தேர்வுகள் நடக்கும். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.ஆலோசனைபிளஸ் 2 தமிழ், ஆங்கிலம் பொதுத்தேர்வில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் எழுதாதற்கான காரணம் குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர், ஆணையர், தனியார் பள்ளிகள் இயக்குநர், மாவட்ட கல்வி அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.பிறகு அவர் கூறுகையில்,தேர்வின் அவசியத்தை மாணவர்களுக்கு அறிவுறுத்தி பெற்றோர்கள் தேர்வு எழுத அனுப்பி வைக்க வேண்டும். அனைத்து மாணவர்களையும் தேர்வு எழுத வைக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்படுகிறோம். மாணவர்கள் ஆப்சென்ட் ஆனது குறித்து உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்.
எதனால், மாணவர்கள் வரவில்லை என ஆலோசனை நடத்தப்பட்டது. இது குறித்து மாவட்ட வாரியாக விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது.பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை அழைக்க வரும் போது பெற்றோர் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மொழிப்பாடத் தேர்வை எழுதாத மாணவர்களை பிற தேர்வுகளை எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்ய வாய்ப்பு இல்லை. இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.