இதுபோல் இந்தியா டுடே குழுமத்தின் ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய கருத்துக் கணிப்பில் திரிபுராவில் பாஜக அணி 35 முதல் 46 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியில் அமரும் என்றும் இடதுசாரி அணி 6 முதல் 11 தொகுதிகளிலும் டிஎம்பி கட்சி 9 முதல் 11 இடங்களில் வெற்றி பெறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகாலயாவை பொருத்தவரை இந்தியா டுடே ஆய்வில் என்பிபி கட்சி 18 முதல் 24 தொகுதிகளிலும், பாஜக 4 முதல் 8 தொகுதிகளில் வெல்லும் என்றும், காங்கிரஸ் கட்சி 6 முதல் 12 தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவருக்கும் பெரும்பான்மை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகாலாந்தில் பாஜக – என்டிபிபி கூட்டணி 38 முதல் 48 இடங்களில் வென்று ஆட்சிக் கட்டிலில் அமரும் என்றும் இந்தியா டுடே குழும கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியல் ஆய்வு மற்றும் வியூக அமைப்பான இந்தியின் பொலிடிகல் அனலிஸ்ட் அண்டு ஸ்ட்ரேடஜிஸ்ட் அமைப்பு நடத்திய ஆய்வில் திரிபுராவில் பாரதிய ஜனதா கட்சி மொத்தமுள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளில்28 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சியான ஐபிஎப்டி 3 இடங்களிலும் வென்று ஆட்சியைப் பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதுபோல், மேகாலயாவில் NPP அதிகபட்சமாக 19 தொகுதிகளிலும், UDP 16 தொகுதிகளிலும் வெல்லும் என்றும், திரிணமுல் 16 இடங்களிலும் காங்கிரஸ் 8 இடங்களிலும் பாஜக ஒரே ஒரு இடத்திலும் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.