கட்டுமான அலுவலகத்தில் ரூ.5 லட்சம் திருட்டு – இன்ஜினியர் மீது புகார்.!!

கோவை சாய்பாபா காலனி ,பாரதி பார்க், 4-வது கிராசில் தனியாருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனம் உள்ளது. இங்கு பீரோவில் இருந்த 5 லட்சத்து 23 ஆயிரத்து 700 ரூபாயை காணவில்லை. யாரோ திருடிவிட்டனர். இதுகுறித்து கட்டுமான நிறுவனத்தின் மேனேஜர் ரமேஷ் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்துள்ளார். புகாரில் அந்த நிறுவனத்தில் சைட் இன்ஜினியராக வேலை பார்த்து வந்த கடலூர் மாவட்டம் திருப்பதி புலியூரை சேர்ந்த ஐயப்பன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.