வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகை திருட்டு

கோவை; நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் மாலதி (வயது 58 ) இவரது கணவர் கோபாலன் இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் மாலதி தனது அக்கா மணியம்மாளுடன் கோவை மாவட்டம் காரமடை, காந்தி நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று மாலதி தனது அக்காளுடன் ஊட்டியில் நடந்த திருவிழாவுக்கு சென்றார். பின்னர் நேற்று வீடுதிரும்பினார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 11 பவுன் நகைகளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து காரமடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..