கோவை பாப்பநாயக்கன்பாளையம் விநாயகர் கோவில்வீதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் ( வயது 58) இவர் காட்டூர் ரோட்டில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவில் பூசாரியாக உள்ளார்.26 -ம்தேதி கோவிலில் பூஜையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து விட்டார். நேற்று சென்று பார்த்த போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்தபணம் 2 ஆயிரத்தை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து பூசாரி விஜயகுமார் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் விக்னேஷ் வழக்கு பதிவு செய்து பொள்ளாச்சி ஆசாத் வீதியைச் சேர்ந்த கார்த்திக் ( வயது 35) என்பவரை கைது செய்தார். இவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0