2021 ஆம் ஆண்டு இந்தியா இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருந்தது. அதில் இருந்து 3 இடங்கள் கீழிறங்கி 2022 ஆம் ஆண்டு 8ம் இடத்தை பிடித்துள்ளது. இதேபோல மிகவும் மாசடைந்த நகரங்கள் பட்டியலில் முதல் 50 நகரங்களில் 39 இந்திய நகரங்கள் இடம்பிடித்துள்ளன.
பாகிஸ்தானில் உள்ள லாகூர் மற்றும் சீனாவின் ஹோட்டான் ஆகியவை மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. அதைத் தொடர்ந்து ராஜஸ்தானின் பிவாடி(Bhiwadi) மூன்றாம் இடத்திலும் டெல்லி 4வது இடத்தில் உள்ளன. டெல்லியின் PM 2.5 அளவு 92.6 மைக்ரோகிராம், என்ற நிலையில் இருக்கிறது. இது பாதுகாப்பான வரம்பை விட கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகம். மிகவும் மாசுபட்ட முதல் 10 இடங்களில் 6 இந்திய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
உலக நாடுகளில் உள்ள மொத்த மாசுபாடு அளவை கணக்கிடும் பட்சத்தில் மத்திய ஆப்பிரிக்காவை சேர்ந்த சாட் (Chad) நாடு தான் அதிகம் மாசுபட்ட நாடாக திகழ்கிறது. அதற்கு அடுத்தபடியாக ஈராக், பாகிஸ்தான், பஹ்ரைன், பங்களாதேஷ் நாடுகள் உள்ளன.
மாசுபட்ட தலைநகரங்கள் பட்டியலில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. காற்றுமாசு குறைவாகவும், தூய்மையாகவும் உள்ள நகரங்களின் பட்டியலில் சென்னையும் இடம்பிடித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் பாதுகாப்பான அளவை விட 5 மடங்கு மாசுபாடுடன் உள்ள சென்னை ஒப்பீட்டளவில் தூய்மையானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மெட்ரோ நகரங்களில் உள்ள மாசுபாட்டை கணக்கிடும் பொது அதிலும் டெல்லி 4வது இடத்தை பெற்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக 99 ஆவது இடத்தில் கொல்கத்தா உள்ளது. இந்த பட்டியலில் சென்னை 682வது இடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலியா, எஸ்டோனியா, பின்லாந்து, கிரெனடா, ஐஸ்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் தான் சுத்தமான நாடுகளாக உள்ளது.