கோவை மாவட்டம் சிறுமுகையை சேர்ந்தவர் லோகநாதன் ( வயது 30) கட்டிடத் தொழிலாளி .இவர் கடந்த 23ஆம் தேதி நண்பர்கள் 3 பேருடன் மது குடிக்க சென்றார். அப்போது மற்றொரு நண்பரை லோகநாதன் தரக்குறைவாக பேசினாராம். .இதனால் ஏற்பட்ட தகராறு அந்த நண்பரை லோகநாதன் தாக்கியுள்ளார். இதனால் அவர்கள் லோகநாதன் மீது ஆத்திரமடைந்தனர். இந்த நிலையில் லோகநாதனை மறுநாள் மீண்டும் அதே நண்பர்கள் மது குடிக்க அழைத்துச் சென்றுள்ளனர். போதைதலைக்கு ஏறியதும் அவரை சரமாரியாக அடித்துள்ளனர். இதில் லோகநாதன் இறந்துவிட்டார். இதனால் தாங்கள் மாட்டி கொள்வோமோ? என்று கருதிய நண்பர்கள் 3 பேரும் லோகநாதனின் பிணத்தை ஒரு சாக்கு முட்டையில் கட்டி பவானி ஆற்றில் வீசினார்கள்.. உடல் கரையோரம் ஒதுங்கியது. அப்போது துர்நாற்றம் வீசியதால் அங்குள்ள மக்கள் போலீசாருக்குதகவல் தெரிவித்தனர் சாக்கு மூட்டையை திறந்து பார்த்தபோது அதில் ஒரு ஆணின் பிணம்அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது. மேலும் அடையா ளங்களை வைத்துபார்த்தபோது இறந்தவர்லோகநாதன் என்றும் சிறுமுகை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இது குறித்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.கொலையாளிகளைப் பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை இன்ஸ் பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் அடங்கிய 3 தனிப்படை அமைக்ப்பட்டது .தீவிரமாக விசாரணை செய்து லோகநாதனனைகொலை செய்த நண்பர்கள் 3 பேரை நேற்று பிடித்தனர்.அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0