கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள வாகராயம்பாளையம், விக்னேஸ்வரா காலனியில்மனைவி, மகன், மகள் ஆகியோருடன்வசித்து வந்தவர் இளங்கோவன் (வயது 42) தொழிலாளி. வால்பாறை பகுதியை சேர்ந்த இவர் மீது திமிங்கல உமிழ்நீர் கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. நேற்று மாலை இவரது மனைவியும், மகனும் வெளியே சென்றுவிட்டனர். இளங்கோவன் அவரது மகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் முகத்தை கைக்குட்டையால் மூடிக்கொண்டு திடீரென இளங்கோவனின் வீட்டுக்குள் புகுந்தது. அந்த கும்பல் இளங்கோவன் முகத்தில் மிளகாய் பொடியை தூவி தலை, கழுத்து ஆகிய இடங்களில் சரமரியாக வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த இளங்கோவன் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமானார் .இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரின் மகள் சத்தம் போடவே அவர்கள் 3 பேரும் தப்பி ஓடி விட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன், கருமத்தம்பட்டி டி.எஸ்.பி. தங்கராமன். இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். இறந்து கிடந்த இளங்கோவனின் உடலை மீட்டுபிரேத பரிசோதனைக்காக கோவைசிங்காநல்லூர் இ .எஸ் . ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் நடத்திய விசாரணையில் 3 பேர் கொண்ட முகமூடி கும்பல் வீட்டுக்குள் புகுந்து இளங்கோவனை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றதுதெரியவந்தது..இளங்கோவனை கொலை செய்தவர்கள் யார்? என்ன காரணத்திற்காக கொலை செய்தனர்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. கொலையாளிகளை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன்உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.இவர்கள் கொலையாளிகளைதீவிரமாக தேடி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0