வரும் 25-ம் தேதி சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சோதனை ஓட்டம் தொடக்கம்..!

சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையம் வரும் 25ம் தேதி பயன்பாட்டுக்கு வருகிறது.

 புதிதாக திறக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனையத்தில் சர்வதேச விமானத்தின் முதல் சோதனை ஓட்டம் ஏப்ரல் 25 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. வங்கதேச நாட்டின் டாக்காவில் இருந்து வரும் விமானம் முதல் விமானமாக இங்கு வந்து புறப்படுகிறது.

சோதனை முறையில் முதலில் சிறிய ரக விமானங்கள் வந்து செல்லும், மே மாதத்தில் இருந்து பெரிய விமானங்கள் இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 8-ம் தேதி சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.

ரூ.1,260 கோடி செலவில் சர்வதேச தரத்தில் அழகிய வடிவில் கட்டப்பட்டுள்ள முனையத்தை தொடங்கி வைத்த பின்னர் பிரதமர் மோடி பார்வையிட்டார். திறன் அதிகரிக்கப்பட்ட இந்த முனையம் மூலம் ஆண்டுதோறும் 3 கோடி பயணிகளை கையாளும் திறனை விமான நிலையம் பெறும் என கூறப்படுகிறது.