கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், “பெண்களுக்கு அரசியலில் அதிக உரிமை கொடுத்த மாநிலம் தமிழ்நாடு.
பெண் ஆளுமைகள் முதல்வராக இருந்த மாநிலம் இது. முத்துலட்சுமி ரெட்டி போன்ற ஆளுமைகளை கொண்ட மாநிலம் இது.
கூட்டணி தொடர்பாக கட்சி தலைமை மட்டும்தான் முடிவெடுக்கும். எந்த கேள்வியை எப்படிப் போட்டு திருப்பிக் கேட்டாலும் நான் கூட்டணி குறித்து பேச மாட்டேன். மேலிடம் முடிவு செய்யும். ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் சித்தாந்தம் கொள்கை உள்ளது. கூட்டணி என வரும் போது அதற்கான தர்மம் உள்ளது.
எந்த தலைவருடைய சிலை அவமதிப்பையும் பாஜக ஒத்துக்கொள்ளாது. கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதுதான் ஜனநாயகம். தலைவர்கள் சிலை அவமதிப்பு ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றல்ல. கூட்டணி தொடர்பாக மாநிலத்தில் இருக்கக்கூடிய எங்களது கருத்துகளை கட்சியினுடைய மேலிடத்தில் தகுந்த முறையில் தெரிவிக்க வாய்ப்புகள் அளிக்கப்படும். கருத்துகளை மீடியாக்கள் வழியாக சொல்லிச் செல்வது கட்சியின் கட்டுப்பாடில்லை.
கட்சித் தலைமை அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கும். கருத்துகளை பரிசீலிக்கும். என் மண் என் மக்கள் யாத்திரைக்கு நல்ல வரவேற்புள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் அவர்களுக்கென்று தனி சித்தாந்தம், கொள்கை இருக்கும். கூட்டணி என வரும் போது, அதற்கென தர்மம் இருக்கிறது. அதை எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஒரு சில தலைவர்கள் அவர்களுடைய கருத்துகளை அவர்கள் பாணியில் வெளிப்படுத்துகிறார்கள்” என்றார்.