டிரைவரை தாக்கி காரை வழிப்பறி செய்த கொள்ளையன் 24 மணி நேரத்தில் கைது.

கோவை போத்தனூர் பகுதியில் வசிப்பவர் அறிவழகன் ( வயது 40) டாக்சி டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். கடந்த 21-ந் தேதி அறிவழகன் ராமகிருஷ்ணா மில்ஸ் அருகில் வாடகைக்காக காத்திருந்த போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத ஒரு நபர் தான் ஊட்டிக்கு போக வேண்டும் எனக்கூறி அறிவழகன் காரில் ஏறி காரமடை வழியாக மருதூர் காலேஜ் புரம் அருகே நிறுத்த சொன்னதாகவும் அறிவழகன் அப்பகுதியில் காரினை நிறுத்திவிட்டு சுமார் 4 மணி நேரமாக காத்திருந்துள்ளார். பின்னர் மாலை சுமார் 7 மணி அளவில் அறிவழகன் டிரைவர் சீட்டிற்கு உட்கார சென்றபோது பின்னால் நின்று கொண்டிருந்த அந்த நபர் திடீரென்று அறிவழகன் கழுத்தில் கத்தியை வைத்து கீறியதா கவும், அவர் சுதாரித்துக் கொண்டு தடுத்துள்ளார். பின்னர் அறிவழகனை கீழே தள்ளிவிட்டு ரூ 9 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள அறிவழகன் காரை வழிப்பறி செய்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.மேற்படி சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் காரமடை காவல் நிலை யத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேற்படி  வழிப் பறி வழக்கில் விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், உத்தரவிட்டார். இதன் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன்விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை தேடி வந்தனர்.இந்த நிலையில்நேற்று மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சம்பத்குமார் மகன் தனுஷ் (வயது 20) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி வழிப்பறி வழக்கில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார். இந்நிலையில் மேற்படி நபரை கைது செய்து மேற்படி வழக்கின் சொத்தான காரை பறிமுதல்செய்தனர்.அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.கார்கொள்ளையனை24 மணி நேரத்தில் கைது செய்த தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் பாராட்டினார்.