மருதமலையில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம். கோலாகலமாக தொடங்கியது.

கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு. சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப்பெருமானின் 7-வது படை வீடாக பக்தர்களால் கருதப்படுகிறது. இங்கு தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தைப்பூசத் திருவிழா நேற்று கொடி யேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அதிகாலை 6 மணிக்கு கோபூஜை நடந்தது .அதனை தொடர்ந்து சாமிக்கு பால் ,பன்னீர், ஜவ்வாது உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் மகா தீபாரதனையும் நடந்தது .அதன் பின்னர் சாமி முத்தங்கி அலங்காரத்தில் காட்சியளித்தார் இதையடுத்து திருவிழா வுக்கான சேவல் பொறித்த கொடியை ஏற்றுவதற்காக சிறப்பு பூஜைகள் நடந்தது. கொடியேற்றத்தையொட்டி விநாயகர் மூஷிக வாகனத்திலும், சுப்ரமணியசாமி வள்ளி தெய்வானையுடன் கற்பக விருட்சக வாகனத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பூஜைகள் முடிந்ததும் கோவில் முன் உள்ள கொடிமரத்தில் தைப்பூசத் திருவிழாவிற்கான சேவல் பொறித்த கொடி ஏற்றப்பட்டது.அப்போது அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் மருதமலை முருகனுக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டனர்.மதியம் 12மணிக்கு உச்சி காலஅபிஷேகம், சுவாமி அன்ன வாகனத்தில் வீதி உலா நடந்தது. புனித யாகசாலை மண்டபத்தில் மாலை 4மணிக்கு வேள்வி பூஜை தொடங்கியது.தைப்பூசத் திருவிழாவை யொட்டி தினந்தோறும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள். வருகிற 10-ஆம் தேதி சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணமும், மறுநாள் தேரோட்டமும் நடக்கிறது..இதற்கான ஏற்பாடுகளை மருதமலை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஜெயக்குமார். துணை ஆணையர் செந்தில்குமார் அறங்காவலர்கள் மகேஷ் குமார், பிரேம்குமார், கனகராஜ், சுகன்யா ராஜரத்தினம்ஆகியோர் செய்து வருகிறார்கள்.