கோவில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை.

கோவை பெரிய கடை வீதியில் அருள்மிகு. ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் யாரோமர்ம ஆ சாமிகள்கோவில்வலதுபக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். இது குறித்து கோவில் நிர்வாகி சி.எஸ். குமரேஷ் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..