வாலிபருக்கு கத்திக்குத்து. டாக்சி டிரைவர் கைது.

கோவை; செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை சேர்ந்தவர் கணேசன் ( வயது 35) இவர் சின்னியம்பாளையம், கருப்பராயன் கோவில் வீதியில் தங்கி இருந்து “பேப்ரிகேஷன்” வேலை செய்து வருகிறார் நேற்று சின்னியம்பாளையம் சின்னத் தோட்டத்தைச் சேர்ந்த கால் டாக்சி டிரைவர் மைக்கேல்ராஜ் (வயது 42)என்பவர் குடிபோதையில் தனது வீட்டிற்கு சென்றார். அவரது மனைவியிடம் தகராறு செய்து கொண்டிருந்தார். இதை கணேசன் தட்டி கேட்டார் .இதனால் ஆத்திரமடைந்த மைக்கேல்ராஜ் மறைத்து வைத்திருந்த கத்தியால் கணேசனை குத்தினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து பீள மேடு போலீசில் புகார் செய்யப்பட்டது.சப்- இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் வழக்கு பதிவு செய்து மைக்கேல் ராஜை கைது செய்தார்.