பைக்கில் இருந்து விழுந்து வாலிபர் பரிதாப சாவு. ஒருவர் படுகாயம்.

கோவை; தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம், 3 – வதுவீதியைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மகன் பவன் ராஜா சிம்மன் ( வயது 25)இவர் நேற்று குறிச்சி மாச்சம்பாளையம் ரோடு, அம்மன் நகரை சேர்ந்த ஹரிஷ் (வயது 21 ) என்பவருடன் பைக்கில்பொள்ளாச்சி ரோட்டில் ஈச்சனாரி அருகேசென்று கொண்டிருந்தார். அப்போ திடீரென்று நிலை தடுமாறி திடீரென்று பைக்கில் இருந்து இருவரும் கீழே விழுந்தனர். இதில் பவன் ராஜா சிம்மன் படுகாயம் அடைந்தார் .ஹரிஷ் வலது காலில் முறிவு ஏற்பட்டது .இவர்கள் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் பவன் ராஜா சிம்மன் நேற்று இரவு இறந்தார் .இது குறித்து அவரது தந்தை தர்மராஜ் கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அமுதா சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.