மின்சாரம் தாக்கி மாணவன் பரிதாப சாவு

கோவை: ஆந்திர மாநிலம் கொல்லா புடியைச் சேர்ந்தவர் நரேஷ். இவரது மகன் சிகுர்பதி மோக்சகானா (வயது 16)ஈஷா பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வந்தார். அங்குள்ள விடுதியில் தங்கியிருந்தார். பள்ளியின் சார்பாக யோகா நிகழ்ச்சிக்காக சக மாணவர்களுடன்பீளமேடு வந்திருந்தார். சாப்பாடு வேளையில்தனது 5 நண்பர்களுடன் சாப்பிடச் சென்றார். சாப்பிட்டுவிட்டு கை கழுவும் போதுதண்ணீர் குழாயில்மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார் .இவரை அங்குள்ள தனியார் மருத்துவமணிக்குஎடுத்துச் சென்றனர். வழியில் இறந்து விட்டார். இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.