கோவை பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள திருமலை நாயக்கன்பாளையம், வீரபாண்டி பிரிவை சேர்ந்தவர் ரத்தினசாமி ( வயது 39)இவரது தாயார் கிட்னி பாதிப்பால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இறந்தார். இதனால் ரத்தினசாமி மிகுந்த கவலையுடன் காணப்பட்டார் ..இந்த நிலையில் நேற்று வீட்டில் எல்லோரும் தூங்கி பிறகு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த அவரது மனைவி கவிதா பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0