எல்லோருக்கும் ரூல்ஸ் ஒன்னு தான்… ஹெல்மெட் அணியாத போலீசாரின் டூவீலர்கள் பறிமுதல்- டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி..!

மிழகத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு மீறுவோருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுகிறது.

இதன் காரணமாக சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களில் 90 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுகின்றனர். அதேபோன்று பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய காவல்துறையினர் பெரும்பாலானோர் ஹெல்மெட் அணிவதில்லை.

இதன் அடிப்படையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில் “ஹெல்மெட் அணியாமல் பணிக்கு வரும் காவல்துறையினரின் வாகனங்கள் பறிமுதல் செய்ய வேண்டும். ஹெல்மெட் வாங்கி வந்து காண்பித்த பிறகு தான் வாகனத்தை ஒப்படைக்க வேண்டும். வாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து மற்றும் சட்ட ஒழுங்கு போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

போலீஸ் என்ற அடையாளத்தை காரணமாக கூறி வாக்குவாதம் செய்வோர் மீது வழக்கு பதிந்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போலீசார் மீது வழக்கு பதிவு செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே போலீசார் அலட்சியமாக இருக்க வேண்டாம்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.