வேலூர் இலவம்பாடியில் செய்தியாளர் மீது கொடூர தாக்குதல் நடத்திய ரவுடிகள்..!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த இலவம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்பாபு. இவர் குடும்பத்துடன் இலவம்பாடி கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர் ஆவார். வேலூர் மாவட்ட செய்தியாளராக பணியாற்றி வருகிறார். அன்றாடம் வருவது போல் கடந்த 20-06-2023ல் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புதுறை அலுவலகத்தில் செய்தித்தாள் வழங்கிவிட்டு செய்தி சேகரிக்க சென்றுள்ளார். இதற்கிடையில் மதியம் சுமார் 12:30 மணிக்குமேல் ராத்திரி ரவுண்ட்ஸ் மாத இதழ் ஆசிரியரிடமிருந்து ராஜ்பாபுவுக்கு போன் வந்தது. இதையடுத்து என்னவென்று கேட்டபோது, ராத்திரி ரவுண்ட்ஸ் ஆசிரியர் கூறுகையில், இலவம்பாடியில் புத்தகங்கள் விநியோகம் செய்யும் பொழுது செய்தியாளர்களை மிரட்டி அருவெறுக்கத்தக்க வார்த்தைகளை கூறி திட்டி சுமார் 20க்கும் மேற்பட்ட நபர்கள் ராத்திரி ரவுன்டஸ் ஆசிரியர் நபர்களை அடித்து துன்புறுத்தி அவமானப் படுத்தியுள்ளனர். ராஜ்பாபு இலவம்பாடி என்பதால் ஆசிரியருக்கு உதவியாக உடனடியாக அங்கு சென்று செய்தி சேகரிக்கவும் காவல்துறைக்கு தொடர்பு கொண்டு பாதுகாப்பு வழங்க உதவி புரிய வேண்டி அந்த இதழ் ஆசிரியர் கேட்டுக் கொண்டார். இதன் பேரில் ராஜ்பாபு வேலூரில் இருந்து இலவம்பாடிக்கு சென்றார். ஆனால் ராஜ்பாபுவுக்கும் ராத்திரி ரவுண்ட்ஸ் இதழுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை, செய்தியாளர்களை அடித்து அவமானப்படுத்தி துன்புறுத்தும் போது ராஜ்பாபு இலவம்பாடிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அங்கு சென்று என்ன ஆனது என கேட்ட போது ஏன் இப்படி அடிக்கின்றீர்கள்? எந்த ஒரு தகவல் ஆனாலும் காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கலாம். இல்லையெனில் ஏதேனும் தவறு இருப்பின் முறையாக நீதிமன்றத்தை அணுகி இருக்கலாமே என ராஜ்பாபு கூறியுள்ளார். அதற்கு இவன் வந்துவிட்டான், இவன் தான் அந்த செய்தியை போட்டடுருப்பான், இவன் தான் அனுப்பியிருப்பான் என தகாத வார்த்தைகளை அதிகமாக பயன்படுத்தி சுரேஷ்மணி, ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன், PTA தலைவர் நாகேந்திரன், முனியாண்டி பூசாரி, சேகர் படிக்கி, பிரபு ,ஏழுமலை, ஆதிமூலம், கோபி, ஏழுமலை, கோபி, சிவகுமார், ஏழுமலை, வெங்கடேசன், பிசரை, தமயந்தி, பிரபு ஆகிய 13 பேரும் திரண்டு வந்து ராஜ்பாபு மீது கொடூரமாக துடிக்க துடிக்க தாக்குதல் நடத்தியுள்ளனர். அடித்த சுரேஷ், கோபி முனிசாமி, கோபி ஏழுமலை, உன்னை வெட்டி விடுவேன் குடும்பத்தோடு காலி செய்து விடுவேன் என இன்னும் பல தகாத வார்த்தைகளை பேசி அடித்து துன்புறுத்தி சட்டையை கிழித்து அவமாப்படுத்தி இருசக்கர வாகனத்தை இரண்டு முறை கீழே தள்ளி சேதப்படுத்தினர். ஊரே பார்க்கும் வகையில் அவமானப்படுத்தியுள்ளனர். தடுக்க யாரும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தாக்குதலில் நெற்றியில், கை, வாய், உதட்டில் இரத்தம் சிந்துவதை பார்த்த  காவல் துறையினர் ராஜ்பாபுவை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸை வரவழைத்து வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மற்ற ராத்தி ரவுண்ட்ஸ் செய்தியாளர்களை மீட்டு பாதுகாப்பாக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பெற்றோர் ஆசிரியர் கழக நாகேந்திரன், இலவம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன், முனியாண்டி கணாசாரி ஆகியோர் தூண்டுதலிலும் இந்த மூன்று பேர் உட்பட 13 பேர் சேர்ந்து செய்தியாளர்களை அடித்து துன்புறுத்தி அவமானப்படுத்தி கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த ரௌடிகள் மீது காவல்துறை மற்றும் தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வழக்கு பதிவு செய்ய வேண்டும். ராத்திரி ரவுண்ட்ஸ் செய்தியாளர்களுக்கும், ராஜ்பாபுவுக்கும் , குடும்பத்தாருக்கும் காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் செய்தியாளர்கள் தரப்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட செய்தியாளருக்கு நியாயம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.