கேரளா மாநிலத்தில் உயிருக்கு அச்சுறுத்தல் தரும் ஷிக்கெல்லா வைரஸ் பரவுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தின் கோழிக்கோடு பகுதியில் தொடர்ந்து இருவருக்கு ஷிக்கெல்லா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது. அசுத்தமான உணவு மற்றும் அசுத்தமான நீரை உட்கொண்டதால் பரவுகின்ற இந்த ஷிக்கெல்லா வைரஸ் கேரள மக்களை பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளது.
சமீபத்தில் காரச்சேரி பகுதியில் வசித்த ஒன்பது வயது சிறுவனுக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து, சிறுவனுடன் தொடர்பில் இருந்த பலருக்கும் சோதனை நடத்தப்பட்டதில் இரண்டு பேருக்கு இத்தகைய தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
தற்போது, இந்த வைரஸ் தொற்று பரவி வரும் காரணத்தால் மாவட்ட நிர்வாகம் நோய் தடுப்பு பணிகளை தீவிரமாக செயலாற்றி வருகின்றது.