திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் 40 ஆண்டு காலமாக பட்டா இல்லாமல் வசித்து வந்த ஏழை எளிய மக்களுக்கு திருச்சி மாவட்ட வருவாய் துறை மூலம் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் சீரிய முயற்சியில் அவரது தலைமையில் சுமார் 872 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுமார் 21 ஊராட்சிகளில் அதிகம் விவசாயம் சார்ந்த கிராமப் பகுதிகளை நிறைந்து காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த 40 ஆண்டு காலமாக வழங்கப்படாத பட்டாவினை இன்று திருச்சி மாவட்ட வருவாய் துறை மூலம் திருவெறும்பூர் தாலுகா அலுவலகத்தில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடராஜபுரம் அரசங்குடி கிருஷ்ணசமுத்திரம் வாழவந்தான் கோட்டை திருநெடுங்குளம் பத்தாள பேட்டை உட்பட ஊராட்சிகளில் உள்ள கிராமப் பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் சுமார் 872 பேருக்கு இலவச பட்டாவானது வழங்கப்பட்டது. மேலும் நடராஜபுரம் ஊராட்சியில் உள்ள கச்சோந்தி மலை கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு 40 ஆண்டு காலமாக பட்ட வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் அங்கு வசிக்கும் பொதுமக்கள் சுமார் ஒன்பது பேருக்கு இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கலைஞரின் கனவு இல்லம் மூலம் 78 நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. மேலும் திருச்சி மாநகராட்சி காட்டூர் 43 வது வார்டில் உள்ள கலைஞர் தெரு திருவள்ளுவர் நகரில் வசிக்கும் சுமார் 100 பேருக்கு இந்த விழாவில் பட்டா வழங்கப்பட்டது. இதே போல் வேளாண் துறை சார்பாக உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் மண்டல குழு தலைவர் மதிவாணன் மாவட்ட கவுன்சிலர் கருணாநிதி திருவெறும்பூர் ஒன்றிய குழு தலைவர் சத்யா கோவிந்தராஜ் மாமன்ற உறுப்பினர்கள் நீலமேகம் செந்தில் கூத்தாப்பார் பேரூர்ராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலெட்சுமி, மாவட்ட ஊராட்சிகள் திட்ட இயக்குனர் கங்காதரணி வருவாய் கோட்டாட்சியர் அருள் திருவெறும்பூர் தாசில்தார் ஜெயபிரகாசம், திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நரசிம்மன் ஸ்ரீதர் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0