ஏணியில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் சாவு. 2 பேர் மீது வழக்கு.

கோவை புலியகுளம், சிறு காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 49) பெயிண்டர். இவர் குறிச்சி ,கே. டி .எஸ் .கார்டன் பகுதியில் ஒரு வீட்டில் பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது ஏணியிலிருந்து கால்தவறி கீழேவிழுந்து விட்டார். இதில் இவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். இதுகுறித்து இவரது மகன் சந்துரு போத்தனூர் போலீஸ் அரசியல் உள்ளார் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாகஅந்த வீட்டின் உரிமையாளர் முகமது அமீர் (வயது 43 மேஸ்திரி சின்னப்பராஜ் (வயது 52) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.