கோவை : திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் இளங்கோ (வயது 36) இவரது மனைவி மகேஸ்வரி இவர்கள் இருவரும் பீளமேடு நேரு நகர், மகாராஜா நகரில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறார்கள். நேற்று இளங்கோ மேஸ்திரி மூர்த்தி என்பவருடன், நேரு நகர் ஜானகி அம்மாள் லேஅவுட்டில் உள்ள வெங்கடேஷ் என்பவருக்கு சொந்தமான பழைய கட்டிடத்தை இடிக்கும் பணிக்கு சென்றார். கட்டிடத்தை இடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று சுவர் இடிந்து இளங்கோ மீது விழுந்தது .இதில் படுகாயம் அடைந்த இளங்கோ அதே இடத்தில் இறந்தார். இது குறித்து அவரது மனைவி மகேஸ்வரி பீளமேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக அந்த வீட்டின் உரிமையாளர் வெங்கடேஷ் மேஸ்திரி மூர்த்தி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0