நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் பெண்கள் நலன் கருதி சுற்றுலா பிரிவு காவல் உதவி மையம் திறப்பு

நீலகிரி மாவட்டம் சுற்றுலா மக்களை கவர்ந்த சுற்றுலா இடமாக உள்ளதால் பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து இருப்பதால், சுற்றுலாப் பயணிகளுக்கு பொது மக்களுக்கும் உதவிடும் வகையில் சுற்றுலா பிரிவு காவல் உதவி மையத்தை
நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன,
உதகை அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில், சுற்றுலா பயணிகள் மற்றும் பெண்கள் நலன் கருதி அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளும் உடனடியாக செய்து தர சுற்றுலா போலீஸ் பிரிவு மையத்தை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார், உடன் கூடுதல் கண்காணிப்பாளர் சௌந்தரபாண்டியன், துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன், பி ஒன் ஆய்வாளர் முரளிதரன், ஏ ஆர் ஆய்வாளர் பெரியசாமி, போக்குவரத்து துணை ஆய்வாளர் அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்,இந்த சுற்றுலா பிரிவு காவல் உதவி மையத்தில் இரண்டு சுற்றுலா காவல் துணை ஆய்வாளர்கள் மணிகுண்டன் சசிகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளன, இவர்களின் பணி 24 மணி நேரமும் செயல்படும் எனப்படுகிறது, மற்றும் சிசிடிவி கேமராக்கள் முலம் கண்காணிக்கப்பட்டு வரும் என்றார், சுற்றுலா பயணிகள் குழந்தைகள் காணாமல் போவது,மற்றும் பெண்களுக்கு ஏற்படும் சில பிரச்சினைகளை குறித்த உதவிகள இந்த மையம் எப்போதும் செயல்படும் என்றார், சுற்றுலா பெண்கள் தங்களது விருப்பத்தை தெளிவாக கேட்டறிய பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளன,
நீலகிரி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் உரையின்போது நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பெண் குழந்தைகள் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் குறைபாடுகள் கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார், தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரையின்போது இங்கு வருகை தந்த அனைவருக்கும் மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் தின நல்வாழ்த்துக்கள் என்று வாழ்த்தினார், சமுதாயத்தில் பெண்கள் பல்வேறு இடங்களில் உயர்ந்து இருந்தாலும், இன்னும் சில இடங்களில் சில நிலைகளில் பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு தேவைப்படுகிறது, அதன் அடிப்படையில் மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று இந்த சுற்றுலா போலீஸ் பிரிவு மையத்தை உதகை அரசு தாவரவியல் பூங்கா சாலை சிறந்த இடம் என்பதை ஆய்வு செய்து சுற்றுலா பிரிவு உதவி மையத்தை அமைத்துள்ளோம் என்றார், இந்த சிறப்பான திட்டத்தை அறிவித்து நிதி உதவிகளை வழங்கிய தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கும் மற்றும் அரசு அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தார், இவ்விழாவில் நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள திபெத்தியர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு திபெத் பொன்னாடை வழங்கி சுற்றுலா பிரிவு காவல் உதவி மையத்தை அனைவருக்கும் ஏற்படுத்தி தந்ததற்காக நன்றி தெரிவித்தனர் இவ்விழாவில் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் மற்றும் காவல்துறை சார்ந்த அதிகாரிகள் காவலர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்