இந்திய பொருளாதாரம் மற்றும் நாணய மதிப்பில் ஏற்படும் பாதிப்புக்கு தங்கம் இறக்குமதி முக்கிய காரணம் என்றால், இந்தியா கச்சா எண்ணெய் போல் தங்கத்திற்கு வெளிநாட்டு இறக்குமதியை தான் அதிகளவில் நம்பியுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் தங்கம், தங்க நகை, தங்க காசு, தங்க பார்கள் விற்பனை செய்வதை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.
இந்த நிலையில் தங்க நகைகளுக்கு மத்திய அரசு ஏப்ரல் 1 முதல் BIS ஹால்மார்க் மற்றும் 6 இலக்கு கொண்டு HUID எண் கட்டாயமாக்கியுள்ளது. இதை தொடர்ந்து அடுத்த முக்கிய முடிவை எடுத்துள்ளது BIS அமைப்பு. இதற்கு மோடி அரசு விரைவில் ஒப்புதல் அளிக்க உள்ளது.
மக்கள் நகை கடைகளில் வாங்கும் தங்க நகைகளுக்கு எப்படி பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை அளிக்கப்படுகிறதோ, இதேபோல் தங்க நகை செய்வதற்காக வாங்கப்படும் தங்க பார்கள் அதாவது Gold Bullion-க்கு BIS Hallmark முத்திரையை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான வழிமுறைகள் தயாராக உள்ளது.
இந்தியாவில் தங்க நகைகளின் தரத்தை உறுதி செய்யவும், மக்கள் பெரும் தொகையை கொடுத்து வாங்கும் தங்க நகைகளுக்கு நியாமான தரத்தை உறுதி செய்ய வேண்டும் அதேபோல் தரத்தில் இத்துறை விற்பனை முறைப்படுத்த வேண்டும் என்பதற்காக BIS மற்றும் 6 இலக்க HUID ஏப்ரல் 1 முதல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கோல்டு புல்லியன் எனப்படும் தங்க நாணயம், தங்க கட்டிகளுக்கும் BIS Hallmarking கட்டாயமாக்க வழிமுறைகளை வகுக்கப்பட்டு அறிக்கை தயாராக உள்ளதாக Bureau of Indian Standard (BIS) டைரக்டர் ஜெனரல் பிரமோத் குமார் திவாரி தெரிவித்துள்ளார்.
தங்க நகைகளின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றால் கட்டாயம் இதை செய்ய பயன்படுத்தும் தங்க பார்கள், தங்த நாணயங்களின் தரத்தை உறுதி செய்தால் மட்டுமே இலக்கை அடைய முடியும், இதற்கான வழிமுறைகளை கொண்ட அறிக்கையை தயாரித்து ஆய்வு செய்து வருகிறோம் என பிரமோத் குமார் திவாரி திங்கட்கிழமை தெரிவித்தார்.
இதற்காக Bureau of Indian Standard (BIS) தனியாக நகை கடைகள், தங்க இறக்குமதியாளர்கள், தங்க சுத்திகரிப்பாளர்கள், தங்கத்தை மதிப்பீடு செய்யும் அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஆலோசனை குழுவை அமைத்துள்ளதாகவும் BIS டைரக்டர் ஜெனரல் பிரமோத் குமார் திவாரி.
ஜூன் 16, 2021 முதல் கோல்டு ஹால்மார்கிங் பியூரிட்டி தர சான்றிதழ் நடைமுறையில் உள்ளது, ஆரம்பத்தில் தானாக முன்வந்து ஏற்கும் வகையிலேயே இருந்தது, பின்னாளில் மத்திய அரசு இதை கட்டாயமாக்கியது. 2 கட்டங்களாக இதை நடைமுறைப்படுத்தியதன் மூலம் இந்தியாவில் 288 மாவட்டங்களில் BIS hallmarking நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும் 51 மாவட்டங்கள் இணைக்கப்பட உள்ளது.
ஹால்மார்க் தனித்துவ அடையாள எண் (HUID) என்பது எண்கள் மற்றும் எழுத்துக்களைக் கொண்ட ஆறு இலக்க எண்ணெழுத்து குறியீடாகும். ஹால்மார்க் செய்யும் நேரத்தில் ஒவ்வொரு நகைக்கும் HUID வழங்கப்படும், மேலும் இது ஒவ்வொரு நகைக்கும் தனித்தன்மை வாய்ந்தாக இருக்கும்.