டெல்லி: மாண்டஸ் புயல் தற்போதுதான் கரையை கடந்து மக்களிடையே நிம்மதியை கொடுத்துள்ள நிலையில், அடுத்து அரபிக்கடலில் உருவாக உள்ள புயலுக்கு மொக்க என பெயரிடப்பட்டு உள்ளது.
இந்த புயலானது அரபிக்கடலில் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகி வடதமிழ்நாட்டில், மாமல்லபுரம் அருகே நள்ளிரவு கரையை கடத்திய மாஸ்டஸ் புயல் தற்போது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டமாக மாறி வருகிறது. இந்த புயலுக்க ‘மாண்டஸ்’ என்ற பெயரை ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்தது. மாண்டஸ் என்பதற்கு ஐக்கிய அரபு அமீரக நாட்டு மொழியில ‘புதையல் பெட்டி’ என்று பொருளாம்.
இந்த புயலால் ஏற்பட்ட பாதிப்பே இன்று சரிசெய்யப்படாத சூழலில், அன்று வங்க கடலிலோ, அரபிக் கடலிலோ உருவாக உள்ள புயலுக்கு ‘மொக்க’ என பெயரிடப்பட்டுள்ளது.
வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் பருவமழை காலங்களில் புயல் சின்னம் உருவாவது வழக்கம். இவ்வாறு உருவாகும் புயல்களுக்கு இந்த பகுதியில் அமைந்துள்ள இந்தியா, பாகிஸ்தான், கத்தார், இலங்கை, ஏமன், தாய்லாந்து, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட 13 நாடுகளும் ஆண்டுதோறும் பரிந்துரைத்து பட்டியலிடப்பட்ட பெயர்களில் இருந்து புயலின் பெயர் முடிவு செய்யப்படும். அதன்படி, அடுத்து, வங்கக் கடலிலோ, அரபிக் கடலிலோ உருவாகும் புயலுக்கு ‘மொக்க’ என்று பெயரிடப்பட உள்ளது. ஏமன் நாட்டில் புகழ்பெற்ற துறைமுகமான மொக்கவை குறிக்கும் வகையில் இந்த பெயரை ஏமன் நாடு பரிந்துரைத்து, அதனை மற்ற நாடுகள் ஏற்று கொண்டுள்ளதை அடுத்து, மாண்டஸை அடுத்து உருவாக உள்ள புயலுக்கு இந்த பெயர் சூட்டப்பட உள்ளதாம்.