மாயமான பெண் கிணற்றில் பிணமாக மிதந்தார்.

கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர், அசோகர் வீதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி சந்திரா ( வயது 60) கடந்த சில ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்தமாதம் 28-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை.இந்த நிலையில் சந்திரா நேற்று வெள்ளலூர் அசோகர் வீதியில் உள்ள பஞ்சாயத்து கிணற்றில் பிணமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.