ஓடும் காரில் தீ பிடித்து எரிந்து நாசம். பயணிகள் தப்பினர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பக்கம் உள்ள ஜடையம்பாளையம் புதூர் ,குறிஞ்சி நகரை சேர்ந்தவர் முரளிதரன். (வயது 43) இவர் பீளமேட்டில்தங்கியிருந்ந்து வாடகைக்கு கார் ஓட்டி வருகிறார். அவர் தனது காரில் பயணிகளை ஏற்றிக்கொண்டு கோவை பீளமேடுஅவிநாசி – ரோட்டில்உள்ள ஒரு கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது காரின் என்ஜின் பகுதியில் இருந்து திடீரென்று புகை கிளம்பியது. அதை பார்த்து அதிர்ச்சிஅடைந்தார். ஆனால் சற்று நேரத்தில் காரின் முன் பகுதியில் தீப்பிடிக்க தொடங்கியது. உடனே சுதாரித்துக் கொண்ட முரளிதரன் காரை ஓரமாக நிறுத்தி பயணிகளை கீழே இறக்கி விட்டார். அதன் பிறகு சிறிது நேரத்தில் கார்முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் கார் முழுவதும் எரிந்து நாசமானது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்துபீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.