மார்கழி மாதம் இன்று தொடங்கியது… வழிபாட்டு தலங்களில் அதிகாலையிலேயே சிறப்பு பூஜைகள்..!

மார்கழி மாதம் தொடங்கியுள்ள நிலையில், வழிபாட்டு தலங்களில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

கார்த்திகை மாதம் நேற்றுடன் நிறைவடைந்து இன்று மார்கழி மாதம் தொடங்கியுள்ளது. வழக்கமாக மார்கழி மாதம் என்றாலே, இந்து மத வழிபாட்டுத் தலங்களில் அதிகாலை சிறப்பு பூஜைகள் மற்றும் விதி உலா பஜனைகள் நடைபெறும்.

அந்த வகையில், இன்று அதிகாலை 4 மணி அளவில் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மார்கழி மாத சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதையொட்டி, அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள், தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்து, சிறப்பு வழிபாடுகள் செய்தனர்.

அதேபோல், பக்தர்களுக்குபிரசாதங்கள் வழங்கப்பட்டன. இன்று தொடங்கி இந்த மாதம் முதல் இந்த இலவச பிரசாதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், பக்தர்கள் பலர், அதிகாலையிலேயே, கோயிலிலிருந்து, குழுவாகப் பக்தி பாடல்கள் பாடியபடி வீதி உலா பஜனை மேற்கொண்டனர். இந்த மாதம் முதல், தொடர்ந்து வீதி உலா பஜனைகள் நடத்தப்படும்.