கத்தியை காட்டி மிரட்டி ஒட்டல் ஊழியரிடம் பணம் பறித்தவர் கைது..!

கோவை:புதுக்கோட்டை மாவட்டம் மணல் மேல் குடியைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 54) இவர் ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் புலியகுளம் பெரியார் நகர் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு ஆசாமி இவரை வழிமறித்தார்.கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 4,300 ரூபாயை கொள்ளை அடித்தார். உடனே முத்துராமலிங்கம் சத்தம் போட்டார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர்.அதற்குள் அந்த ஆசாமி தப்பி ஓடிவிட்டான். இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கோவை ராஜவீதி பக்கம் உள்ள கருப்ப கவுண்டர் வீதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற அயோத்தி ரவி (வயது 45 ) என்பவரை கைது செய்தனர்.இவர் மீது கொலை, மிரட்டல் வழிப்பறி உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.