சென்னையை அ டுத்த குன்றத்தூர் காவல் நிலையத்தில் சென்னை முகப்பேரைச் சேர்ந்த சந்தோஷ் வயது 20 தகப்பனார் பெயர் வெங்கடேசன் என்பவன் தன்னுடைய அப்பா வெங்கடேசன் தாயார் லட்சுமி தம்பி சந்திரகுமார் ஆகியோர் சேர்ந்து குன்றத்தூர் பகுதியில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடைபெற்ற நீட் தேர்வுக்காக கடந்த 5.5.2024 ஆம் தேதி வந்ததாகவும் கல்லூரி வளாகத்தில் என்னையும் எனது தம்பியையும் இறக்கிவிட்டு பெற்றோர்கள் இருவரும் தங்களுடைய இன்னோவா காரில் தொழில் தொடர்பாக சேலம் சென்று வருவதாக கூறி சென்றவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை என தந்தை வெங்கடேசன் தாயார் லட்சுமி வீடு திரும்பவில்லை என குன்றத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காணவில்லை என வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தியதில் காணாமல் போன லட்சுமி சேலத்தில் இருப்பதாக தகவல் வரவே குன்றத்தூர் போலீஸ் தனிபடையினர் சேலம் சென்று லட்சுமி மற்றும் அவருடன் இருந்த கணேசன் நித்யானந்தம் விக்னேஷ் ஆகியோரிடத்தில் போலீஸ் பாணியில் விசாரணை செய்ததில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் மற்றும் சகோதரர்கள் அவனுடைய உறவினர்கள் மற்றும் ஊர்காரர்களிடம் வெங்கடேசன் சென்னையில் தான் சிபிஐ டைரக்டராக இருப்பதாகவும் தனது மனைவி லட்சுமி ஐஏஎஸ் ஆபிஸராக அரசு வேலை இருப்பதாகவும் சென்னையில் குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாக கூறி கடந்த 2021 ஆம் ஆண்டு கோடிக்கணக்கில் பணத்தை வாங்கிக்கொண்டு வேலையும் வாங்கி கொடுக்காமல் கொடுத்த கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்காமல் அனைவரையும் ஏமாற்றி வந்ததாகவும் அந்த பணத்தில் தர்மபுரி மாவட்டத்தில் சுமார் 62 ஏக்கர் நிலம் வாங்கி வைத்துள்ளதாகவும் இதனிடையே பலமுறை சென்னைக்கு வந்து பணம் கேட்டபோது வெங்கடேசனுக்கு சொந்தமாக உள்ள இடத்தை விற்பனை செய்து கடனை திருப்பித் தருவதாக கூறி வந்தவர் அவர்களுக்கு தெரியாமல் பாதிக்கு மேற்பட்ட இடத்தை விற்பனை செய்தும் மீதமுள்ள இடத்தை விற்க நில புரோக்கர் விஜயராகவன் என்பவரிடம் வெங்கடேசன் கூறியுள்ளதை தெரிந்த கணேசன் மற்றும் அவருடைய சகோதரர்கள் உறவினர்கள் பத்து நாட்களுக்கு முன்பு வெங்கடேசனை சேலத்துக்கு வரவழைத்து சிபிஐ டைரக்டர் எனக்கூறி பிராடு வேலை செய்த வெங்கடேசனை வெளியே விடாமல் அடைத்து வைத்து சித்திரவதை செய்து பணத்தை வாங்கி விடலாம் என திட்டம் தீட்டி விஜயராகவனை அணுகி வெங்கடேசனை சேலத்துக்கு வரவழைத்து தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டதின் பேரில் இடம் வாங்க ஆள் வந்திருப்பதாக விஜயராகவன் வெங்கடேசனிடம் கூறி கடந்த 5.5.2024 ஆம் தேதி மாலை 4 மணி அளவில் இன்னோவா காரில் வெங்கடேசன் அவனது மனைவி போலி ஐஏஎஸ் அதிகாரி லட்சுமி அது இருவரையும் விஜயராகவன் சேலம் வரவழைத்து அங்குள்ள ஒரு ஜவுளி கடையில் வெங்கடேசனையும் அவனது மனைவியும் ஒப்படைத்த பின்னர் கணேசனுக்கு சொந்தமான தோட்ட வீட்டிற்கு அழைத்துச் சென்று இருவரையும் தனித்தனியாக ரூமில் அடைத்து கணேசன் வெங்கடேசனுக்கு பணம் கொடுத்து ஏமாந்த கோயம்புத்தூரை சேர்ந்த நித்தியானந்தம் கிருஷ்ணகிரியை சேர்ந்த விக்னேஷ் மற்றும் மேச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சிலர் வெங்கடேசனை கைகளாலும் கட்டைகளாலும் பலமாக தாக்கினர் வலி தாங்காமல் இறந்து போன வெங்கடேசனை கணேசனின் அண்ணன் கிரசர் இடத்தில் உள்ள காலி இடத்தில் புதைத்தது தெரிய வரவே இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி புலன் விசாரணை நடத்தப்பட்டது திப்பம்பட்டி கிராமத்திற்கு 9.5.2024 ஆம் தேதி காலை சென்று ஊத்த காவல் காவல் நிலைய ஆய்வாளர் கந்தவேலு ஊத்தங்கரை டிஎஸ்பி பார்த்தியப் ப ன் ஊத்தங்கரை தாசில்தார் திருமால் முன்னிலையில் போலி சிபிஐ டைரக்டர் வெங்கடேசனின் பிரேதத்தை மருத்துவர் சபரி பிரேத பரிசோதனை நடத்தி போலி ஐஏஎஸ் அதிகாரி லட்சுமியிடம் ஒப்படைத்தனர் இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கணேசன் நித்தியானந்தம் விக்னேஷ் ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர் பல கோடி ரூபாய்க்கு ஆசைப்பட்டு போலி சிபிஐ டைரக்டர் வெங்கடேசனின் நிலைமை என்ன ஆயிற்று பார்த்தீர்களா இவனது மனைவி போலி ஐஏஎஸ் அதிகாரி லட்சுமியின் விதியை பார்த்தீர்களா தமிழ்நாட்டு மக்களே திருந்துவீர்களா என்றைக்கு தான் திருந்துவீர்கள்
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0