கோவை மாவட்டம் கோமங்கலம் பக்கம் உள்ள கூள நாயக்கன்பட்டி, இந்திரா நகரை சேர்ந்தவர் விஷ்ணு ( வயது 29) நேற்று காலையில் வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் ஏ. நாகூரில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்று விட்டார் மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின்உன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ஒரு பவுன் தங்ககம்மல்களை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர்.இது குறித்து விஷ்ணு கோமங்கலம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து பொள்ளாச்சி கெடிமேடு ,இந்திரா நகரை சேர்ந்த பிரேம்குமார் ( வயது 29) என்பவரை நேற்று இரவு கைது செய்தனர்.இவரிடமிருந்து நகை மீட்கப்பட்டது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0