ஹிந்துஅல்லாததோர் கோவில்களில் அனுமதிக்கப்படுவதில்லை’என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது…

துரை:’தமிழகத்தில் அனைத்து கோவில்களிலும், ‘கொடிமரத்திற்கு அப்பால் கோவிலுக்குள் ஹிந்துஅல்லாததோர் அனுமதிக்கப்படுவதில்லை’ என்பதைக் குறிக்கும் அறிவிப்பு பலகைகளை நிறுவ வேண்டும். ஹிந்து மதத்தில் நம்பிக்கையில்லாத ஹிந்துஅல்லாததோரை அனுமதிக்கக்கூடாது’ என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தாக்கல் செய்த மனு:ஹிந்து அல்லாத சிலர் பழனி மலையிலுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு செல்ல, வின்ச் ஸ்டேஷனில் டிக்கெட் வாங்கினர். டிக்கெட் வழங்கும் அலுவலர், ‘ஹிந்து அல்லாதோருக்கு அனுமதியில்லை’ எனக்கூறி, டிக்கெட்டுகளை திரும்பப் பெற்றார். அவர்களில் ஒரு நபர், ‘இது ஒரு சுற்றுலாத்தலம்’ எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஹிந்து அமைப்பினர், வின்ச் ஸ்டேஷனில் திரண்டனர். கோவில் ஊழியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.’ஹிந்துக்கள் அல்லாதோருக்கு கோவிலில் அனுமதியில்லை’ என்ற அறிவிப்பு பலகை கும்பாபிஷேக சீரமைப்புப் பணியின் போது அகற்றப்பட்டது. அதை மீண்டும் வைக்கத் தவறியதற்காக கோவில் நிர்வாகத்தை கண்டித்தோம்.மீண்டும் நுழைவாயிலில் அறிவிப்பு பலகை நிறுவப்பட்டது. சில மணிநேரங்களில் அவற்றை மீண்டும் அகற்றினர். இதற்கு சில உயரதிகாரிகளின் அழுத்தம் தான் காரணம்.ஹிந்து கோவில்கள் வழிபாட்டுத் தலங்களாக பராமரிக்கப்படுகின்றன.
அது மாசுபடாமல் இருக்க, ஹிந்து அல்லாத எவரும் நுழைய கூடாது. அனைத்து மொழிகளிலும்பழனி மலைக்கோவில் ஒரு பொழுதுபோக்கு சுற்றுலா தலமல்ல. கோவில் நுழைவுச் சட்டம் ஹிந்து அல்லாத எந்த ஒரு சமயத்தினரும் கோவிலுக்குள் நுழைவதை தடுக்கிறது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், மாற்று மதத்தினர் கோவிலுக்குள் நுழைய வேண்டிய அவசியமில்லை.பழனி கோவில் வளாகத்தில், ‘ஹிந்து அல்லாதோருக்கு அனுமதியில்லை’ என அனைத்து மொழிகளிலும் அறிவிப்பு பலகையை நிறுவ வேண்டும். ஹிந்துக்கள் மட்டும் மலைக்கோவில் வளாகம் மற்றும் அதன் உபகோவில்களில் அனுமதிக்கப்படுவர் என அறிவிப்பு செய்ய உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.அந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவு:தமிழக கோவில் நுழைவு அங்கீகாரச் சட்ட விதிகள் 1948ல் வெளியானது. அது, ‘ஹிந்து அல்லாதோருக்கு அனுமதி இல்லை’ என்கிறது. அறநிலையத்துறை சட்ட விதிகள் ஹிந்து அல்லாதோரை கோவிலுக்குள் நுழைவதைத் தடை செய்கிறது.’ஹிந்து அல்லாதோருக்கு அனுமதி இல்லை’ என குறிப்பிட்டு அறிவிப்பு பலகையை நிறுவினால், அது கோவிலுக்குச் செல்ல விரும்பும் நபர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் என அரசு தரப்பு தெரிவித்தது. இது அவரது உணர்வுகளை புண்படுத்தும் என்ற பேச்சுக்கே இடமில்லை.

உணர்வுகளை பாதிக்கும்ஹிந்து மதம் மற்றும் கோவில் பழக்கவழக்கங்களை பின்பற்ற மறுக்கும் ஹிந்து அல்லாதோரை கோவிலுக்குள் அனுமதித்தால், அது பயபக்தியுடன் நம்பிக்கையை பின்பற்றும் ஏராளமான ஹிந்துக்களின் உணர்வுகளை பாதிக்கும்.இது, இந்திய அரசியலமைப்பு உத்தரவாதம் அளித்துள்ள ஹிந்துக்களின் உரிமையை பாதிக்கும். ஹிந்து மதத்தில் நம்பிக்கை இல்லாத ஹிந்து அல்லாதோரின் உணர்வுகள் குறித்து அரசு தரப்பில் கவலைப்படுகின்றனர்.ஹிந்து கோவில்கள், அதன் பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளை பாதுகாக்க வேண்டிய கடமை, ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உள்ளது. ஹிந்து அல்லாதோரின் உணர்வுகள் குறித்து அனுதாபம், தவறான கவலையையும் அரசு தரப்பில் கொண்டுள்ளனர்.ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் ஹிந்து மதத்தை பின்பற்ற உரிமை உண்டு. அதுபோல் பிற மதத்தினரும் தங்கள் மதத்தைப் பின்பற்ற உரிமை உண்டு.ஆனால் அந்தந்த மதத்தின் பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளில் தலையிட முடியாது.

எந்த குறுக்கீடும் தடுக்கப்பட வேண்டும்.கோவில் ‘பிக்னிக் ஸ்பாட் ‘ அல்லது சுற்றுலாத்தலம் அல்ல. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் பிற மதத்தினர் கோவிலின் கட்டடக்கலை, நினைவுச் சின்னங்களை ரசிக்க அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் கொடிமரத்திற்கு அப்பால் அனுமதிக்கப்படுவதில்லை.கோவில் வளாகங்களை ஆகமங்களின்படி பராமரிக்க வேண்டும். ஹிந்து மதத்தில் நம்பிக்கை இல்லாத பிற மதத்தினரை அனுமதிக்க அரசியலமைப்புச் சட்டம் எந்த உரிமையையும் அரசுக்கு வழங்கவில்லை.தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில், பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் கோவில் வளாகத்தை ‘பிக்னிக் ஸ்பாட்டாக’ கருதி, அங்கு அசைவ உணவு உட்கொண்டதாக புகார் எழுந்தது.அதுபோல, பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்களின் புனித புத்தகத்துடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கருவறைக்கு அருகில் நுழைந்து, சன்னிதிக்கு முன் பிரார்த்தனை செய்ய முயன்றதாக ஜன., 11ல் நாளிதழில் செய்தி வெளியானது.

அறநிலையத்துறை கடமைஇச்சம்பவங்கள் அரசியல் சாசனம் ஹிந்துக்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளில் தலையிடுவதாக உள்ளன. ஹிந்துக்கள் தங்கள் மதத்தை சுதந்திரமாக பின்பற்ற, பரப்ப அடிப்படை உரிமை உள்ளது. பழக்கவழக்கங்கள், நடைமுறைகளின்படி கோவில்களை பராமரிக்க ஹிந்துக்களுக்கு உரிமை உள்ளது.இதுபோன்ற தேவையற்ற சம்பவங்களிலிருந்து கோவில்களை பாதுகாக்கும் கடமை அறநிலையத்துறைக்கு உள்ளது.பழனி கோவில் நுழைவுவாயில், வின்ச் ஸ்டேஷன், ரோப் கார் ஸ்டேஷன் அருகில் அறிவிப்பு பலகையை நிறுவ வேண்டியதில்லை. அது, கோவில் வளாகத்திற்குள் வராது; முழு பழனி மலையும் ஹிந்துக்களுக்கு புனிதமானதாக கருதப்படுகிறது என்ற அரசு தரப்பின் வாதத்தை ஏற்க முடியாது.கோபுரம் அல்லது வின்ச் ஸ்டேஷன் அல்லது ரோப் கார் ஸ்டேஷன் போன்ற நுழைவாயிலில் அறிவிப்பு பலகை வைத்தால், அது ஹிந்து அல்லாதோருக்கு எச்சரிக்கையாக இருக்கும்.ஹிந்து அல்லாதோர் மலையில் ஏறிய பின், அவர்களுக்கு அனுமதி இல்லை என, தெரிந்தால் மன உளைச்சலை ஏற்படுத்தும்.

ஏறுவதற்கு முன் ஏன் தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்புவர்.இதை தவிர்க்க, நுழைவாயிலில் ஒரு பலகையை நிறுவுவது மற்றும் முடிந்தவரை பல இடங்களை நிறுவுவது கட்டாயமாகும். மாநில அரசு, அறநிலையத்துறை அனைத்து ஹிந்து கோவில்களிலும் கீழ்கண்ட வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.l கோவில்களின் நுழைவாயில், கொடிமரத்திற்கு அருகில், கோவிலின் முக்கிய இடங்களில், ‘கொடிமரத்திற்கு அப்பால் கோவிலுக்குள் ஹிந்து அல்லாதோரை அனுமதிக்கப்படுவதில்லை’ என்பதைக் குறிக்கும் அறிவிப்பு பலகைகளை நிறுவ வேண்டும்l ஹிந்து மதத்தில் நம்பிக்கையில்லாத ஹிந்துக்கள் அல்லாதோர் அனுமதிக்கக்கூடாதுl ஹிந்து அல்லாதோர் யாரேனும் கோவிலில் குறிப்பிட்ட கடவுளை வழிபட விரும்புவதாகக் கூறினால், அக்கடவுள் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும், ஹிந்து மதத்தின் பழக்க வழக்கங்கள், நடைமுறைகளை பின்பற்றுவதாகவும் உத்தரவாத உறுதிமொழியை பெற வேண்டும். அதனடிப்படையில் ஹிந்து அல்லாதோர் கோவிலுக்குள் அனுமதிக்கலாம்l உறுதிமொழி விபரத்தை கோவிலில் பராமரிக்கப்படும் பதிவேட்டில் குறிப்பிட வேண்டும்l கோவிலின் ஆகமங்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி கோவில் வளாகத்தை பராமரிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.