கோவை மாவட்டம்,சுல்தான்பேட்டை ஒன்றியம்,வாரப்பட்டி ஊராட்சிக்கு சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் ISO 9001:2015 தரச்சான்று வழங்கியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப அவர்கள் ஊராட்சித் தலைவர் கவிதா தர்மராஜ் இடம் சான்றிதழை வழங்கினார். நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர்/திட்ட இயக்குநர் மதுரா,ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்/ஊராட்சிகள் சரவணன் சுல்தான்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகாமி, சிக்கந்தர் பாட்சா , வாரப்பட்டி ஊராட்சி மன்ற துணை தலைவர் தங்கவேல், ஒன்றியக்குழு உறுப்பினர் ரங்கசாமி ,வாரப்பட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சிச் செயலாளர் பா. பவித்ரன் ஆகியோர் உடன் இருந்தனர் பெறப்பட்ட சான்றிதழை மின்சார துறை, கோயமுத்தூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் மாண்புமிகு செந்தில் பாலாஜியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.