ரியல் எஸ்டேட் அதிபர் செந்தில் கார்த்திகேயன் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை.

கோவை பீளமேடு கோல்டு வின்ஸ் பகுதியை சேர்ந்தவர் செந்தில் கார்த்திகேயன்.பிரபல ரியல் எஸ்டேட் அதிபர். இவர் அதிமுகவில் முக்கிய பிரமுகராக இருந்து வந்தார்..இவரது மனைவிக்கு மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவதற்கு இடம் வழங்கப்பட்டது. அதில் அவர் தோல்வி அடைந்தார். பின்னர் செந்தில் கார்த்திகேயன் தி.மு.க.வில் இணைந்தார். இவர் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.இந்த நிலையில் பிளமேடு கோல்வின்ஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை 6 மணிக்கு திடீர் சோதனை மேற்கொண்டனர். 7 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.கோவையில் ரேஸ் கோர்ஸ் சாய்பாபா காலனி உட்பட 3 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகிறார்கள் என்று கூறப்படுகிறது..