மதுரை, -மதுரை ஊமச்சிகுளம் அருகே செட்டிகுளம் ஊராட்சியில் மேல்நிலை குடிநீர் தொட்டியில் தேசிய கொடி வரைந்து தேசப்பற்றை வெளிப்படுத்தியுள்ளனர்.ஊராட்சி தலைவர் பூங்கோதை கூறியதாவது: ஊராட்சி சார்பில் மக்கள், மாணவர்களிடம் தேசப்பற்றை கொண்டு செல்ல யோசித்தோம். செட்டிகுளத்தில் ஒரு மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டும் தேவை ஏற்பட்டது. அமைச்சர் மூர்த்தி முயற்சியில் ரூ.16.50 லட்சம் மதிப்பில் குடிநீர் தொட்டியை கட்டினோம். கணவர் மலைவீரன் தொட்டியில் தேசிய கொடி வரையும் ‘ஐடியா’ கொடுத்தார். அதன்படி பொறியாளர்கள் குடிநீர் தொட்டியில் அசோக சக்கரத்துடன் கூடிய தேசிய கொடியை வரைந்தனர்.
பில்லர்களிலும் தேசிய கொடி போல் வண்ணம் தீட்டினர். இதனை பகுதி மக்கள், அரசு அலுவலர்கள் என அனைவரும் பாராட்டுகின்றனர். சிலர் நின்று ‘செல்பி’ எடுப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது, என்றார்.