மின்கம்பத்தில் தூக்கு போட்டு ஓட்டல் அதிபர் தற்கொலை.

கோவை மதுரை மாவட்டம், பேரையூர் முத்துராமலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் கருப்புசாமி ( வயது 28) இவர்கணபதியில் ஓட்டல் நடத்தி வந்தார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கடன் வாங்கி கீரனத்தம் பகுதியில் மற்றொரு ஓட்டல் திறந்தார். அந்த ஓட்டலில் சரிவர வியாபாரம் நடக்கவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த கருப்புசாமி, செங்கத்துறை நொய்யல் ஆறு அருகே மின்கம்ப டவரில் நைலான்கயிற்றை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.