தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார்.
ஆளுநரின் இந்த செயலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு மாநிலங்களைவில் தமிழ்நாடு எம்பிக்கள் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பட்ட விவகாரம் தொடர்பாக, இன்று தமிழ்நாடு அரசு சட்டமன்ற அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது.
இந்த சூழலில் ஆளுநர் ஆர்.என்.ரவி பிப்ரவரி 7-ம் தேதி மதியம் 1.20 மணியளவில் 3 நாள் பயணமாக டெல்லி செல்கிறார். பிறகு 9-ம் தேதி தமிழ்நாட்டிற்கு திரும்புகிறார்.
நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பட்ட விவகாரத்திற்கு மத்தியில், ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.