கோவை,தொண்டாமுத்தூர், அட்டுக்கல் பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்த வனத்துறையினர்

கோவை வனச்சரகம், தடாகம் பிரிவு போலுவாம்பட்டி பிளாக்கில், உள்ள கெம்பனூர் சுற்றுக்கு உட்பட்ட வனப்பகுதி அட்டுக்கல் பகுதியில் உள்ள அட்டுக்கல், பெரும்பள்ளம் பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் அதிகமாக இருப்பதாக அப்பகுதி குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர், இதனை தொடர்ந்து வனத்நுறையினர் உரிய வழிமுறையாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நேற்று 27.ம்தேதி மாலை சுமார் 6.30 மணி அளவில் அரசு வன கால்நடை அலுவலர், ஆனைமலை புலிகள் காப்பகம் அலுவலர்கள், பணியாளர்கள், வன அலுவலர் தலைமையில் வனச்சரக அலுவலர், வனவர் மற்றும் சரக பணியாளர்கள் உடனிருக்க சிறுத்தையை பிடிப்பதற்காக இரும்பினால் ஆனா ஆறு அடி நீளமும், நான்கு அடி அகலம் கொண்ட கூண்டு வைக்கப் பட்டு தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள் , கோவை என வனப்பா துகாப்பு ,வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர், தொடர்ந்து வனத்நுறையினர் இரவு பகல் என சுழற்சி முறையில் சிறுத்தையை பிடிக்க ஈடுபட்டுள்ளனர்.