இரு குழந்தைகளின் தந்தை வேலைக்கு சென்றவர் காணவில்லை

காஞ்சிபுரம் ஓரிக்கை மிலிட்டரி ரோடு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர். தேவிகா வயது 33 இவருக்கும் செல்வம் என்பவருக்கும் 11 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது சம்பவத்தன்று செல்வம் வேலைக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு. இதுவரை வீடு திரும்பவில்லையாம் ஒருவேளை குடும்பம் எப்படி நடத்துவது என்று பயந்து போய் வீடு திரும்பாமல் இருக்கலாம் என்ற கோணத்தில் காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் தேவிகா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து செல்வத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.